உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீரோடையை சுத்தப்படுத்தி தடுப்பு அமைக்க கோரிக்கை

நீரோடையை சுத்தப்படுத்தி தடுப்பு அமைக்க கோரிக்கை

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோவில்பாளையம் - சோழனூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள நீரோடையை சுத்தம் செய்து, தடுப்பு அமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் இருந்து சோழனூர் செல்லும் வழித்தடத்தில், நீரோடை உள்ளது. இந்த நீரோடையில் அதிகளவு செடிகள் முளைத்து புதர் சூழ்த்துள்ளது.இதனால், மழை நீர் வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீரோடை குறுக்கிடும் பகுதியில் ரோட்டின் இருபக்கமும், தடுப்புகள் இன்றி இருப்பதால் இரவு நேரத்தில், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.மேலும், மழை பெய்யும் நேரத்தில், வாகனங்களில் செல்லும் போது, எதிர் திசையில் வரும் வாகனம் தெரியாததால் சிரமம் ஏற்படுகிறது. இதனால் நீரோடையில் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. இது மட்டும் இன்றி நீரோடையின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி கிடப்பதால், பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, நீரோடையை சுத்தம் செய்து, ரோட்டின் இருபுறமும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்க வேண்டும். இதனால், இங்கு குப்பை கொட்டுவது தவிர்க்கப்பட்டு, ஓடையில் நீர் சென்றால் விளைநிலங்கள் செழிப்படையும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை