உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி சுடும் போட்டி

போலீஸ் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி சுடும் போட்டி

கோவை;துப்பாக்கி சுடுதல் போட்டியை போலீஸ் கமிஷனர் துவங்கி வைத்தார்.கோவை ரைபிள் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான, 49வது ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்த இந்த போட்டியை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை ரைபிள் அசோசியேஷன் தலைவர் ஆகியோர் துவங்கி வைத்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,655 துப்பாக்கி சுடும் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர். ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று முதல், 21ம் தேதி வரையும், பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி, 22ம் தேதி முதல், 26ம் தேதி வரையும் நடக்கிறது.ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 21ம் தேதியும், பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 26ம் தேதியும் பரிசு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை