| ADDED : ஜூலை 02, 2024 02:24 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ் செல்லாத வழித்தடத்தில், குடியிருப்பு பகுதிகளில் செல்லும் இந்த பஸ்சில், அதிகப்படியான மக்கள் பயணிக்கின்றனர்.ஆனால், அவ்வப்போது, கலெக் ஷன் வேண்டி, அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இணையாக, மினிபஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வேகம் காட்டும் மினி பஸ்களால், வாகனங்களில் செல்வோர் மற்றும் பாத சாரிகள் பாதிக்கின்றனர்.மேலும், பயணியர் கைகாட்டும் இடங்களில் எல்லாம், திடீரென நிறுத்துவதால், பின்னால் வரும் வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்படுகிறது.மக்கள் கூறுகையில், 'அதிவேகத்துடன் இயக்கப்படும் மினி பஸ்களால் ரோட்டில் செல்வோர் அச்சப்பட வேண்டியுள்ளது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு செய்ய வேண்டும். விதிமீறி இயங்கும் மினி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.