உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில்  நாளை சுதர்சன ேஹாமம் 

கோவில்களில்  நாளை சுதர்சன ேஹாமம் 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நாளை மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (14ம் தேதி) காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மஹா சுதர்சன ேஹாமம், பூர்ணாஹுதி, மஹா அபிேஷகமும், மதியம், 12:30 மணிக்கு கோவில் வளாகத்தில் சுவாமி உலா, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதியில் உள்ள விஷ்ணு பஜனை கோவிலில், மஹா சுதர்சன ேஹாமம் நாளை நடக்கிறது. விழாவை யொட்டி காலை, 6:00 மணிக்கு சுதர்சன ேஹாமம், 10:00 மணிக்கு பூர்ணாஹுதி, மஹா அபிேஷகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் நாளை காலை, 8:00 மணிக்கு ஸ்ரீ சுதர்சன ேஹாமம், 9:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் மூலவர் மற்றும் உற்சவருக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை