உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கணும் ஆசிரியர் கழகம் கோரிக்கை

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கணும் ஆசிரியர் கழகம் கோரிக்கை

கோவை:சனிக்கிழமை பள்ளி வேலை நாட்களாக, அறிவித்து இருக்கும் உத்தரவை திரும்ப பெறவேண்டும் என, தமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இந்த கல்வியாண்டில் உள்ள, 44 சனிக்கிழமைகளில் 20 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இது குறித்து, ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறியதாவது:தமிழகத்தை பொருத்தவரை, பள்ளிகளுக்கு 200 நாட்கள்தான் வேலை நாட்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு 219 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 சனிக்கிழமைகள் ஆசிரியர்கள் வேலைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சனிக்கிழமை பள்ளிகளை திறந்தால், 50 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் ஆசிரியர்களின் உழைப்பு வீணாகிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் போது, பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். அதனால் 219 வேலை நாட்கள் என்பதை, 200 நாட்கள் என, அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ