உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி தேதி

அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி தேதி

கோவை : தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்றுடன் நிறைவு பெறுகிறது.மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, கல்லுாரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.கோவை அரசு கலை கல்லுாரியில், இரண்டு சுழற்சி முறையில் 557 பேர் முதுநிலையில், 21 பிரிவுகளில் சேர்க்கப்படவுள்ளனர். விண்ணப்பங்களை, ஆன்லைன் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். கல்லுாரிக்கு செல்ல வேண்டியதில்லை.கடந்த, ஜூலை 27ல் துவங்கிய விண்ணப்ப செயல்பாடுகள், இன்றுடன் நிறைவு பெறுவதால், முதுநிலை படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள், www.tngasa.inஎன்ற இணையதளம் வழியாக, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என, முதல்வர் எழிலி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை