உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யூனியன் வங்கி லோன் மேளா நாளை துவக்கம்

யூனியன் வங்கி லோன் மேளா நாளை துவக்கம்

கோவை;யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் வீடு மற்றும் கார் கடன் மேளா, நாளை மற்றும் ஜூலை 23ம் தேதிகளில் நடக்கிறது.அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில், காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில், குறைந்த வட்டி விகிதத்தில், வீட்டுக் கடன் மற்றும் கார் கடன்கள் வழங்கப்படுவதுடன், உடனடி ஒப்புதலும் பெற முடியும்.உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் ரூ.10 லட்சம் முதல் வீட்டுமனைகள் இங்கு வாங்கலாம். இக்கண்காட்சியில் பல்வேறு முன்னணி பில்டர்கள் மற்றும் கார் டீலர்கள் கலந்து கொள்கிறார்கள்.பட்ஜெட் வீடுகள், சொகுசு வீடுகள், அபார்ட்மென்ட்டுகள், பண்ணை குடியிருப்பு மற்றும் பிளாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 100க்கும் மேற்பட்ட புராஜக்ட்டுகள் இந்த மேளாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன.பில்டர்களின் ஸ்டால்களில் உடனடி முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.குழந்தைகள், பெண்கள் மற்றும் திருமணநாள், பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை