உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீடம்பள்ளி குட்டையில் பிடுங்கப்பட்ட மரக்கன்றுகள்

பீடம்பள்ளி குட்டையில் பிடுங்கப்பட்ட மரக்கன்றுகள்

சூலுார்;பீடம்பள்ளியில் மரக்கன்றுகளை வேரோடு பிடுங்கி வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூலுார் அடுத்த பீடம்பள்ளி ஊராட்சியில் தவசி குட்டை உள்ளது. இங்கு ஊராட்சி அனுமதியோடு தன்னார்வலர்கள் ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குட்டையில் வளர்ந்திருந்த, 15க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளன. இதையறிந்த தன்னார்வலர்கள் அதிர்ச்சி அடைந்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'நன்கு வளர்ந்து வந்த நிலையில், 15க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளன. குட்டையில் இருந்து மண் எடுக்க, டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரம் செல்ல வழி ஏற்படுத்த மரக்கன்றுகளை பிடுங்கியுள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை