உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுகலான ரோட்டில் வாகனங்கள் தடுமாற்றம்

குறுகலான ரோட்டில் வாகனங்கள் தடுமாற்றம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் - தேவனாம்பாளையம் செல்லும் ரோட்டில் இருபுறமும் புதர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் - தேவனாம்பாளையம் செல்லும் ரோடு, இரண்டு கி.மீ., தூரம் உள்ளது. இந்த ரோட்டில், நாள்தோறும் ஏராளமானோர் பயணிக்கின்றனர்.ரோட்டின் இரு புறங்களிலும் அதிக அளவு செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர்.வளைவு பகுதியில், எதிரே வரும் வாகனம் தெரியாத அளவில் சில இடங்கள் புதர் வளர்ந்து உள்ளதால், பைக் ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மற்றும் ஆங்காங்கே குப்பையும் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.இந்த ரோடு ஒரு வழி பாதை போன்று குறுகி காட்சியளிப்பதால், இரண்டு வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது, விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டின் ஓரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை