உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காற்றாலை மின் உற்பத்தி 4,892 மெகாவாட்டாக உயர்வு

காற்றாலை மின் உற்பத்தி 4,892 மெகாவாட்டாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக அனல், புனல், காற்றாலை, மத்திய மின் தொகுப்பு மூலம், 19,064 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதில் காற்றாலைகள் மூலம் அதிகபட்சம், 9,046 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.ஜூன் இறுதி முதல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் தென்மேற்கு பருவகாற்று சீசன் தொடங்கி உள்ளது. அதற்கேற்ப காற்றாலை மின் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கிறது. கடந்த மே, 16, 18ல், பூஜ்யமாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, 17ல், 198; 23ல், 1,315; 25ல், 4,444; 27ல், 4,529 மெகாவாட், நேற்று முன்தினம், 4,892 மெகாவாட் என உயர்ந்தது. அதேநேரம் நேற்று முன்தினம், 17,199 மெகாவாட் ஆக இருந்த தமிழக மின் உற்பத்தி நேற்று, 15,634 மெகாவாட்டாக சரிந்தது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை