| ADDED : பிப் 10, 2024 09:21 PM
கோவை:பச்சாபாளையம், ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியின், 17வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பாலக்காடு, இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குனர் சேஷாத்ரி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 489 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.தொடர்ந்து அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு, நவீன தொழில்நுட்ப சாதனங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.விழாவில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், கல்லுாரி முதல்வர் பால்ராஜ், பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.