மேலும் செய்திகள்
அறங்காவலர்கள் பொறுப்பேற்பு
1 hour(s) ago
காமாட்சி அம்மன் கோவிலில் 4ம் ஆண்டு வருடாபிேஷகம்
1 hour(s) ago
கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு
1 hour(s) ago
கோவை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 33,000 மாணவர்கள் ஆதார் எண் இல்லாமல் இருப்பதால், பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்களை நடத்த, கோரிக்கை வலுத்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 5 லட்சத்து 89 ஆயிரத்து 561 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 33,000 பேரிடம் ஆதார் எண் இல்லை; 51,370 பேருக்கு ஆதார் பயோமெட்ரிக் 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகையை பெறவும், வங்கி கணக்கு துவங்கவும், ஆதார் எண், அதன் இணைப்பு அவசியம். குறிப்பாக, 5 முதல் 7 வயது வரையிலும், 15 முதல் 17 வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்கு, ஆதார் எண் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் யு.டி.ஐ.எஸ்.இ.,ல் (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு) மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற, ஆதார் அட்டையில் உள்ள பெயர், ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகிய நான்கு தகவல்களும் பள்ளி ஆவணங்களுடன் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே, மாணவர் சேர்க்கை போர்ட்டலில் உறுதியாகும். தற்போது ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள பெற்றோரும், மாணவர்களும் இ- சேவை மையங்களுக்கு செல்கின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும், அலைச்சலும் ஏற்படுகிறது. தபால் மூலம் ஆதார் புதுப்பித்தல் நடந்தாலும், தேவைகள் அதிகம் இருப்பதால், அனைத்து பள்ளிகளிலும் ஆதார் சிறப்பு முகாம்களை விரைந்து நடத்த வேண்டும் என்று, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago