உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத 73 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத 73 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள்

கோவை : கோவை மாவட்டத்தில், 73 ஆயிரத்து, 66 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை.கோவை மாவட்டத்தில், 11 லட்சத்து, நான்காயிரத்து, 942 அரிசி பெறும் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும், ரூ.1,000 ரொக்கம் ஆகிய பரிசுத்தொகுப்பு, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.கடந்த, 10ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டது. இம்முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம், 10 லட்சத்து, 31 ஆயிரத்து, 876 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது, 93.39 சதவீதம். இன்னும், 73 ஆயிரத்து, 66 கார்டுதாரர்கள் பெறவில்லை.இதேபோல், கோவை மாவட்டத்துக்கு, ஏழு லட்சத்து, 55 ஆயிரத்து, 409 சேலை, ஏழு லட்சத்து, 35 ஆயிரத்து, 934 வேட்டிகள் ஒதுக்கப்பட்டன. இவை, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. இவற்றில், ஏழு லட்சத்து, 20 ஆயிரத்து, 344 சேலை, ஏழு லட்சத்து, மூன்றாயிரத்து, 156 வேட்டிகள் வினியோகிக்கப்பட்டு விட்டதாக, வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதில், 80 சதவீத கார்டுதாரர்களுக்கே இலவச வேட்டி, சேலை சென்றடைந்திருக்கிறது; வி.ஏ.ஓ., அலுவலகங்களில் இருந்து வேட்டி, சேலை முழுமையாக வழங்காததால், இன்னும், 20 சதவீத கார்டுதாரர்களுக்கு வழங்கவில்லை. இவர்களுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் கடை திறக்கும்போது, மாதாந்திர பொருட்கள் வாங்க வரும் சமயத்தில் வழங்கப்படும் என, ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.ரேஷன் கார்டுதாரர்கள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்களால், பரிசு தொகுப்பு பெற முடியவில்லை. அ.தி.மு.க., ஆட்சியின் போது, விடுபட்ட கார்டுதாரர்களுக்கு பண்டிகை முடிந்த பிறகும் வழங்கப்பட்டது. அதேபோல், விடுபட்ட கார்டுதாரர்களுக்கு மீண்டும் வழங்க அரசு முன்வர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ