மேலும் செய்திகள்
இன்று இனிதாக
1 hour(s) ago
விளைநிலங்கள் அருகே ஆயில் பேரலால் பரபரப்பு
1 hour(s) ago
திருவண்ணாமலை தீப தரிசனம்: 15 சிறப்பு பஸ்கள் இயக்கம்
1 hour(s) ago
மாசாணியம்மன் கோவிலில் ரூ.84.34 லட்சம் காணிக்கை
1 hour(s) ago
கோவில்பாளையம்: காளப்பட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சாலையோரத்தில் இறந்து கிடந்தது. கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காளப்பட்டியிலிருந்து வீரியம் பாளையம் செல்லும் சாலையில், பெரும்பள்ளம் பாலத்தை ஒட்டி பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. குழந்தையின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு இருந்தன. இறந்த குழந்தையை நேற்று மதியம் பார்த்த சைமன் என்பவர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பச்சிளங்குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் பிரேமா ஆகியோரும் விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த குழந்தையின் கால்களை நாய்கள் கடித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago