உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.3.32 லட்சத்தை எடுத்த பைனான்ஸ் நிறுவனம்

ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.3.32 லட்சத்தை எடுத்த பைனான்ஸ் நிறுவனம்

கோவை;கோவை தொண்டாமுத்துார் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அற்புத ராஜன், 46, போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த, 2022ம் ஆண்டு கோவை காந்திபுரம், 7வது வீதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். அப்போது உத்தரவாதமாக போஸ்ட் ஆபீஸ் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம்., கார்டு உட்பட ஆவணங்களை அற்புத ராஜன் கொடுத்துள்ளார்.அதன் பின் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜன், 45, என்பவர் அற்புத ராஜனுக்கு தெரியாமல் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.3.22 லட்சத்தையும், அவரது மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தையும் எடுத்துள்ளார். இதுகுறித்து அற்புத ராஜன், நாகராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதை தொடர்ந்து அற்புத ராஜன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜன் மீது கந்து வட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை