| ADDED : ஜன 20, 2024 08:19 PM
கோவை:''கோவையின் அடையாளமாக திகழும் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி, 2024-25ம் கல்வியாண்டு முதல் இருபாலர் பள்ளியாக செயல்படவுள்ளது,'' என, பள்ளி முதல்வர் ரோஸ்லின் ஜெயா தெரிவித்துள்ளார். கடந்த 1956ம் ஆண்டு முதல் மகளிர் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் கல்வியாண்டு முதல், இப்பள்ளி மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் இருபாலர் பள்ளியாக செயல்படவுள்ளது. இதற்கான அறிவிப்பும் பள்ளி சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் ரோஸ்லின் ஜெயா கூறியதாவது: பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 பிரிவிலும், புது பொலிவுடன் செயல்படவுள்ளது. இருபாலர் பள்ளியாக நவீன தொழில்நுட்ப கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுடன் மாணவர்களின் ஒருங்கிணைந்த அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி செயல்படும்.அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களுக்கு, 90439-74774.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.