உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 54 இடங்களில் தானியங்கி மழைமானிகள் கோவையில் புதிதாக அமைக்க நடவடிக்கை

54 இடங்களில் தானியங்கி மழைமானிகள் கோவையில் புதிதாக அமைக்க நடவடிக்கை

- நமது நிருபர் -கோவை மாவட்டத்தில், புதிதாக, 54 தானியங்கி மழைமானிகள் மற்றும், 5 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஊரிலும் மழைமானி அமைக்க வேண்டும்; மாவட்ட அளவில் கால நிலை ஆராய்ச்சி மையங்கள் உருவாக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக,'தினமலர்'நாளிதழில், கடந்தாண்டு, நவ., 17ல் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, தமிழகம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக அறியும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும், புதிதாக தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை, துல்லியமாக கணக்கிடும் வகையில், புதிதாக, 54 தானியங்கி மழைமானிகள், 5 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைவாயிலாகஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்துக்குள் தானியங்கி மழைமானி அமைக்கும் பணி துவக்கப்பட்டிருக்கிறது.வடக்குதாலுகா-5, அன்னுார்தாலுகா -5, மேட்டுப்பாளையம்-7, கோவை தெற்கு-1, சூலுார்-6, பேரூர்-5, மதுக்கரை-5, பொள்ளாச்சி-5, கிணத்துக்கடவு-3, ஆனைமலை-6, வால்பாறை-6 என, மொத்தம், 54 தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்படும்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, அன்னுார், பேரூர் மற்றும் கோவை வடக்குதாலுகாக்களில்தலா ஒரு தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.கோவை மாவட்டத்தில் இப்பணிகள் முடிந்து, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை