உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை வள்ளலார் தினம் ; இறைச்சி கடைகளுக்கு தடை

நாளை வள்ளலார் தினம் ; இறைச்சி கடைகளுக்கு தடை

கோவை;வள்ளலார் தினத்தில் இறைச்சி கடைகள் செயல்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.வள்ளலார் தினம் அனுசரிக்கப்படும் நாளை ஆடு, மாடு மற்றும் கோழி வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் உக்கடம், சத்தி ரோடு, போத்தனுார் அறுவைமனைகள் மற்றும் துடியலுார் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தரவை மீறுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை பாயும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி