உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாளில் வெவ்வேறு விபத்து; மாணவர் உட்பட 4 பேர் பலி

ஒரே நாளில் வெவ்வேறு விபத்து; மாணவர் உட்பட 4 பேர் பலி

கோவை;கோவையில் ஒரே நாளில் ஏற்பட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவர் உட்பட, 4 பேர் பலியானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.* கோவை உக்கடம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் பிரவீன்காந்த், 19; நகைப்பட்டறை ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த கல்லுாரி மாணவர் சதீஷ்குமார், 19, என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சுங்கம்- - உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது, எதிர்பாராத விதமாக பைக் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பிரவீன்காந்த், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த சதீஷ்குமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.* நாகர்கோவில் முகிலன் விளையை சேர்ந்தவர் சக்தி கணேஷ், 36; இவர் கோவை நீலாம்பூரில் மனைவி, மகள், மகனுடன் தங்கியிருந்து பீளமேட்டில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர், பைக்கில் சுங்கம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பைக் ஷோரூம் ஊழியர் ஒருவர், பைக்கை சோதனைக்காக ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக சக்தி கணேஷ் மீது மோதினார். துாக்கி வீசப்பட்ட சக்தி கணேஷ், பலத்த காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த இரு விபத்துகள் குறித்தும், கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.* சுந்தராபுரம் குறிச்சியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சஞ்சய், 17. இவர் நேற்று முன்தினம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சய், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை