உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலத்தில் பறக்கும் பஸ்களால் அதிருப்தி

பாலத்தில் பறக்கும் பஸ்களால் அதிருப்தி

பொள்ளாச்சி;கோவை, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் பஸ்கள், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் செல்லாமல், மேம்பாலத்தில் செல்வதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி - கோவைக்கு இடையே கிணத்துக்கடவு அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட போது, கிணத்துக்கடவு நகரப்பகுதியை கடந்து செல்லும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.இதனால், தொலைதுாரத்தில் இருந்து வரும் வாகனங்கள், அனைத்தும் மேம்பாலத்தில் பயணிக்கின்றன. கிணத்துக்கடவு பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைத்துள்ளது.இந்நிலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பல நேரங்களில் சர்வீஸ் ரோடு வழியாக கிணத்துக்கடவு செல்லாமல், மேம்பாலத்தில் செல்கின்றன.இதனால், கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி, கோவை செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று, தை அமாவாசை தினத்தில், பஸ்களில் பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால், பொள்ளாச்சி, கோவையில் இருந்து பஸ் புறப்படும் போதே, கிணத்துக்கடவுக்கு பஸ் செல்லாது என, கண்டக்டர் கூறி பயணியரை இறக்கி விட்டுள்ளனர்.இதனால், கிணத்துக்கடவு செல்வோர் பஸ் பிடிக்க அலைமோதி அதிருப்தி அடைந்தனர். இதுபற்றி, அரசு போக்குவரத்து அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை