மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
14 hour(s) ago
நாளைய மின்தடை
14 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
14 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
14 hour(s) ago
கோவை:'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில் ஒப்பந்ததாரர்கள் அவசரப்பட்டு முன்கூட்டியே எந்தவொரு பணிகளையும் செய்யக்கூடாது' என, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது.நலச்சங்க செயலாளர் சந்திரபிரகாஷ் அறிக்கை:மாநகராட்சி ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படை தன்மை கிடையாது. மாநகராட்சி அலுவலர்கள் சிலர் தங்கள் வீடுகளில் டெண்டர் சம்பந்தமான கோப்புகளை மறைத்து, யாரும் பார்க்க விடாது தடுக்கின்றனர். டெண்டர் திட்ட மதிப்பீடு, அளவீடு உள்ளிட்ட விபரங்களை ஒப்பந்ததாரர்கள் பார்க்க விடுவதில்லை.டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளின்படி முறையாக 'டெண்டர்' விட்டு தான் பணிகளை நடத்த வேண்டும். ஆனால், 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில் முன்கூட்டியே பணிகளை செய்து முடிக்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் அவசரப்பட்டு அப்படி எந்த வேலையும் செய்யக்கூடாது.'டெண்டர்' விடாது பணிகளை மேற்கொள்ள தனிப்பிரிவு சட்ட விதிமுறைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் கோவை, 100 அடி ரோட்டில் டெண்டர் விடாமல் சாலைப் பணி செய்யப்பட்டது. அப்போது பெரிய பிரச்னையாகி மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போது, இதேபோல் அதிகளவு டெண்டர் விடாமல் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன; இந்நடைமுறை சரியல்ல. இதனால், திட்டப் பணிகள் செய்தவர் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகளும் 'விஜிலென்ஸ்' விசாரணைக்கு ஆளாக நேரிடும். எனவே, அனைவரும் இதில் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago