நீ திமன்றத்தில் மின்னணு முறையில் வழக்கு தாக்கல் ( இ-பைலிங்) செய்வதற்கு, முதலில் பயனராக பதிவு செய்ய வேண்டும். பயனராக தன்னை பதிவு செய்த பின்னர் தான் வழக்குகளை பதிவு செய்ய முடியும். எனவே, ஒவ்வொரு வழக்கறிஞரும் தம்மை ஒரு பயனராக பதிவு செய்துகொள்வது அவசியமாகும். இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும், பார் கவுன்சிலில் தன்னை வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், ஒரு பயனராக தன்னை பதிவு செய்த பின்னர், இந்தியாவிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய மின்னணு வழக்குதாக்கலை பயன்படுத்தலாம். மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்வதற்கு, https://www.efiling.ecourts.nic.inஎன்ற வலைதளத்திற்கு சென்று, பயனர் கணக்கை உருவாக்கலாம். அதற்காக முதலில், தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக்கொண்டு, பயனர் கணக்கு படிவத்தை நிரப்ப வேண்டும். வழக்கறிஞர்கள் பயனராக பதிவு செய்ய, மொபைல் போன் எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றை குறித்து வைத்து கொண்டு பதிவை துவங்க வேண்டும். தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வழக்கறிஞர் பதிவு சான்றிதழ் போன்ற ஆணவங்களை, பதிவு செய்ய தொடங்கும் முன்பே, இந்த ஆவணங்களை பதிவு செய்ய பயன்படுத்தும் கணினி அல்லது மொபைல் போனில் தயாராக சேமித்து வைத்து கொள்ள ேவண்டும். அதன் பிறகே, பதிவை துவங்க வேண்டும். ஏனெனில், பதிவு செய்வதற்கு கால அளவு வரையறுக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் பயனராக பதிவு செய்ய, மொபைல் போன் எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றை குறித்து வைத்து கொண்டு பதிவை துவங்க வேண்டும். தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை பதிவு செய்ய துவங்கும் முன்பே, பயன்படுத்தும் கணினி அல்லது மொபைல் போனில் தயாராக சேமித்து வைத்துக் கொள்ள வேன்டும். அதன் பிறகே, பதிவை தொடங்க வேண்டும்.