உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மன் நகர் பூங்கா இடத்தை சுற்றிலும் கம்பி வேலி போட முடிவு

அம்மன் நகர் பூங்கா இடத்தை சுற்றிலும் கம்பி வேலி போட முடிவு

கோவை : கோவை மாநகராட்சி, 95வது வார்டில் அம்மன் நகர் உள்ளது. பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இவ்விடத்தை சுத்தம் செய்து, பூங்கா அல்லது சமுதாய கூடம் கட்டித்தர, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பூங்கா இடத்துக்கு அருகே வெள்ளலுார் ராஜவாய்க்கால் செல்கிறது.இப்பகுதியில் புதிதாக உருவாகியுள்ள, லே-அவுட்டுக்கு வழித்தடம் ஏற்படுத்த, ராஜவாய்க்கால் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது.பூங்கா இடத்தை ஆக்கிரமித்து, சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதி மக்கள், மாநகராட்சிக்கு தகவல் கொடுத்து, தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லே-அவுட்டுக்குச் செல்ல வழித்தடம் தேவை என கூறியும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.மாநகராட்சி தரப்பில், பொது ஒதுக்கீடு இடம் என வாதிடப்பட்டது; அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே, அவ்விடத்தை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் சுத்தம் செய்தனர். இனி, சுற்றிலும் வேலி அமைக்க இருப்பதாக, தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை