உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜே.என்.,1 பாதிப்பவர் குணம் :சுகாதார துறையினர் நிம்மதி

ஜே.என்.,1 பாதிப்பவர் குணம் :சுகாதார துறையினர் நிம்மதி

திருப்பூர்:ஜே.என்., 1 புதிய கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள், சிகிச்சை தொடராமல், ஒரு வாரத்துக்குள் குணமடைவதால், தொற்றில் இருந்து மீள்வதால், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து, கர்நாடாவில் பரவ துவங்கிய, ஜே.என்., 1 புதிய கொரோனா, டிச., கடைசி வாரம் தமிழகத்திலும் நுழைந்தது. நான்கு மாவட்டங்களில் சிலருக்கு தொற்று உறுதியானது. 2023, மே மாதத்துக்கு பின், ஏழு மாதங்களில் இல்லாத வகையில் கொரோனா சற்று வேகமெடுத்ததால், அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது.டிச., 30, 31ம் தேதி, 700 ஐ கடந்திருந்த நாட்டின் கொரோனா பாதிப்பு, ஜன., முதல் வாரத்தில், 600 க்கும் கீழ் குறைந்து, கடந்த வாரம், 500ஆக குறைந்தது. தமிழகத்திலும், இரட்டை இலக்கத்தில் பதிவாகி வந்த பாதிப்பு, ஒற்றை இலக்கத்துக்கு வந்து விட்டது. நேற்று முன்தினம், ஏழு பேருக்கு மட்டும் கொரோனா உறுதியானது. அத்துடன், ஜே.என்., 1 பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் ஒரு வாரத்துக்குள் குணமடைந்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.மருத்துவக்குழுவினர் கூறியதாவது:கொரோனா முதல் இரண்டு அலைகளின் போதும், அறிகுறி தெரிய வந்து, பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவியது. என்ன நடக்கிறது என்பதை அறியும் முன், சிலருக்கு திடீரென உடல்குறைபாடு ஏற்பட்டு, நுரையீரல் பாதிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, இறப்பை தழுவிடும் நிலை ஏற்பட்டது.ஆனால், தற்போதைய ஜே.என்.,1 புதிய கொரோனா அவ்வாறு இருப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை. இணை நோய் உள்ளவர்கள் பாதிப்புக்கு ஆளானாலும், சிகிச்சை துவங்கியவுடன் மீள்கின்றனர். இணை நோய் இல்லாதவர்கள், நான்கு முதல் அதிகபட்சம் ஆறு நாட்களில் கொரோனாவில் இருந்து விடுபட்டு விடுகின்றனர்.அவர்களை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தொடர் மருத்துவ சிகிச்சை அளிகும் நிலை இல்லை. எதிர்ப்பு சக்தி தரும் மருந்து, மாத்திரைகளில் குணமடைந்து விடுகின்றனர். இதனால், ஜே.என்., 1 ஒமைக்ரான் போல, கடந்து சென்று விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை