உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிக்கானி குளோபல் அகாடமி ஆண்டு விழா

கிக்கானி குளோபல் அகாடமி ஆண்டு விழா

கோவை:பேரூர், செட்டிபாளையம், கிக்கானி குளோபல் அகாடமி பள்ளியில், 'நவரசங்கள்' எனும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் துஷர் கிக்கானிதலைமை வகித்தார். கல்வி ஆலோசகர் மற்றும் கிக்கானி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், கல்வி மற்றும் பல துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, விஜயம் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.பள்ளியின் துணைத் தலைவர் ஆஷா மேரி, முதல்வர் ஷாலினி, கோவை குஜராத் சமாஜ் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை