| ADDED : பிப் 10, 2024 01:24 AM
அன்பு காட்டுவோம்அன்பை பகிர்ந்து ஆராதிப்பதற்கான தினம், பிப்.,14'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார், வள்ளலார் பெருமகனார். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர் மீதும் நாம் அன்பு பகிர வேண்டுமென்று பறைசாற்றும் இவ்வாசகம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவ்வகையில், நமக்காக உயிரையே தரத்துணியும் செல்லப்பிராணிகள் மீது பேரன்பு செலுத்தி கொண்டாடுவோமென முழங்குகின்றனர் 'பெட்' ஆர்வலர்கள்!'பெட்'களின் பிறந்த நாள், நமக்கான பிறந்த நாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, அவற்றுக்கு எதைத் தரவேண்டும்; எதை தரக்கூடாது என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பிரியமானவர்களின் நலனில் அக்கறை காட்டிட தவறிவிடக்கூடாதல்லவா... அதற்கான டிப்ஸ் இதோ: