உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நல்லமுடி பூஞ்சோலையில் சுற்றுலா பயணியர் குதுாகலம்

நல்லமுடி பூஞ்சோலையில் சுற்றுலா பயணியர் குதுாகலம்

வால்பாறை;தமிழக -- கேரள எல்லைப்பகுதியில் ரம்யமான தோன்றும் மேகமூட்டத்தை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.வால்பாறையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள எந்த அணையும் நிரம்பவில்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது.இந்நிலையில், சுற்றுலா பயணியர் அதிகளவில் கண்டு ரசிக்கும் நல்லமுடி காட்சிமுனைப்பகுதி தமிழக - கேரள எல்லையில் உள்ளது. இங்கு ரம்யமான சூழல் நிலவும் நிலையில், இயற்கை அழகோடு, மேகமூட்டம் படந்த நிலையில் காட்சியளிப்பதை, சுற்றுலா பயணியர் வெகுவாக ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை