உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அயோத்தி ராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை கோலாகலம் கோவில்களில் பஜனை; சுவாமி க் கு சிறப்பு பூஜை

அயோத்தி ராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை கோலாகலம் கோவில்களில் பஜனை; சுவாமி க் கு சிறப்பு பூஜை

- நிருபர் குழு -அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி சத்திரம் வீதி சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அயோத்தி ராமர் கோவில்கும்பாபிேஷக விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என போலீசார் தெரிவித்ததால், ஹிந்து அமைப்பினர், பா.ஜ.,வினர் கோவிலில் திரண்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தனியார் கோவில்களில் நேரலை செய்ய போலீஸ் அனுமதி தேவையில்லை என உத்தரவிட்டது.இதையடுத்து, போலீசார் அங்கு இருந்து சென்றனர். அதன்பின் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. பா.ஜ.,வினர், ஹிந்து அமைப்பினர், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். தொடர்ந்து, அகண்ட பஜனை நடந்தது. மினர்வா பள்ளி மாணவர்கள், பக்தி பாடல்களை பாடினர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. * அயோத்தி விழாவை முன்னிட்டு, 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கம், இளைஞர் சங்கம், மகளிர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவிலில் அபிேஷக பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.* பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் மற்றும் திப்பம்பட்டி சிவசக்தி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், ஹிந்து அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டு, அயோத்தி கும்பாபிேஷக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

உடுமலை

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேற்று சிறப்பாக நடந்தது. நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடுமலை பகுதிகளிலுள்ள கோவில்களிலும், சிறப்பு பூஜைகள், பஜனை என களை கட்டியது.* உடுமலை காந்தி நகர், விநாயகர் கோவில் அருகில் அமைந்துள்ள, நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், பட்டாபிேஷக ராமருக்கு, காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, அகண்ட நாம கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ராம நாமம் ஜெபித்து வழிபட்டனர். மாலை, பிரதான வீதிகளில், இசைக்கருவிகளுடன் வீதி பஜனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், நம்பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. வில், அம்பு ஏந்தி ராம அவதார அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். நாம சங்கீர்த்தனம், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன.* தில்லை நகர் ஆனந்தசாய் கோவிலில், சிறப்பு யாக சாலை பூஜைகள் நடந்தன. ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் என பட்டாபிேஷக ராமருக்கு, பல்வேறு திரவியங்களில் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன.* சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமருக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன.* ஜி.டி.வி., லே -- அவுட் செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.* நகர பா.ஜ., சார்பில், ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர், சவுதாமலர் லே-அவுட், அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவில், ஏரிப்பாளையம் தங்காத்தம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.உழவர் சந்தை அருகில், சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. பா.ஜ., நகரத்தலைவர் கண்ணாயிரம், மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மகளிர் அணி ராதிகா, வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பூளவாடி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை, ராம கீர்த்தனை மற்றும் அன்னதானம் நடந்தது. குடிமங்கலம் நால் ரோட்டில், ராமர் பட்டாபிேஷக படத்திற்கு, மலர் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி