| ADDED : டிச 08, 2025 05:29 AM
காரமடை: காரமடை அருகே மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காரமடை அருகே மருதூர் கிராமத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து, இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, மண்வளத்தின் முக்கியத்துவம், மண் ஆரோக்கிய அட்டை பயன்பாடு, உரம் பயன்படுத்தும் முறைகள், இயற்கை விவசாயத்தின் நன்மைகள், பயிர் சுழற்சி மற்றும் நீர் சேமிப்பு பற்றி, விவசாயிகளுக்கு விளக்கினார். காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி, மண் வளத்தை பாதுகாப்பதே, நிலையான விவசாய வளர்ச்சிக்கு அடிப்படை, என்று தெரிவித்தார். காரமடை வேளாண் அலுவலர் பிரியா, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுகந்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி, வேளாண் அலுவலர் சுகப்பிரியா, சிவராஜ், ஆட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கள் ஆர்.தினேஷ்குமார், டி.தினேஷ்குமார், விவசாயிகள் பங்கேற்றனர்.