உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரூ.70 லட்சம் மோசடி: தம்பதி கைது

 ரூ.70 லட்சம் மோசடி: தம்பதி கைது

கோவை: கோவையில், சாப்ட்வேர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேர்ப்பதாக கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்த, தம்பதியை போலீசார் கைது செய்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையம், தேவையம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், 71 என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜாராம், 44 மற்றும் அவரது மனைவி சவுந்தர்யா,32 ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர். இத்தம்பதியினர், தாங்கள், சாப்ட்வேர் ஆப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு நல்ல பங்குதாரர்கள் தேவைப்படுவதாகவும், ஆசை வார்த்தை கூறி, தன்னிடம் ஆறு லட்ச ரூபாயும், அதேபோல மற்றவர்களிடம், 64 லட்ச ரூபாயும் என, மொத்தம், 70 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, கோவிந்தராஜ், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார், மோசடியில் ஈடுபட்ட, ராஜாராம், சவுந்தர்யாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை