| ADDED : ஜன 07, 2024 12:51 AM
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு கோவில்களில், சாஸ்தா ப்ரீதி உற்சவம் கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம், பாலக்காட்டில் பல்வேறு சாஸ்தா கோவில்களில் சாஸ்தா ப்ரீதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.நுாறணி ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் நேற்று காலை மகா கணபதி ஹோமம், பூர்ணாபிஷேகம் நடந்தது. செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க உற்சவர் யானை மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.தொண்டிகுளம் ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் நேற்று காலை மகா சன்னியாசம், பூர்ணாபிஷேகமும், யானை மீது சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கும் வைபவமும் நடந்தது. மாலையில், அசீர்வாதம், வஞ்சி பாடல், சாஸ்தா பாடல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் உற்சவம் நிறைவுபெற்றது.கல்பாத்தி வேட்டக்கொரு மகன் ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில், நேற்று காலை மகா கணபதி ஹோமம், பூர்ணாபிஷேகம், அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மங்கள வாத்தியம் முழங்க, உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலையில், மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.