உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடுப்பணையில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

தடுப்பணையில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

சூலுார்:''செங்கத்துறை தடுப்பணையில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கவும், ஆழப்படுத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சூலுார் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ராமச்சந்திரா குளம், செங்கத்துறை தடுப்பணை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி, ராஜேந்திரன், ரவிக்குமார் உள்ளிட்டோர், கோவை கலெக்டரிடம் அளித் மனு: சூலுார் -- செங்கத்துறை சாலையில், எஸ்.எப்., எண் 3ல், ராவத்துார் தடுப்பணை உள்ளது. 2017ல் பெய்த கனமழையால், 15 ஏக்கர் பரப்புள்ள இந்த தடுப்பணை சேதமானது.தொடர் கோரிக்கையால், சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க பணிகள் நடக்கின்றன. பல ஆண்டுகளாக வண்டல் மண் எடுக்காததால், அணையின் கொள்ளளவு குறைந்துவிட்டதால், அதிகளவு நீரை தேங்க முடியாத நிலை உள்ளது.அதனால், தடுப்பணையை ஆழப்படுத்தும் விதத்தில், அதிலுள்ள வண்டல் மண் எடுக்க, சுற்றுவட்டார விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை