உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.ஜி.வி., மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

பி.ஜி.வி., மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.மாணவர்களின் அணிவகுப்புடன் விழா தொடங்கியது. விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை ரைடர்ஸ் அணி வென்றது. மேலும், 2023ம் ஆண்டின் விளையாட்டு மற்றும் சிறந்த செயல் திறன் ஆண்கள் பிரிவில், பிளஸ், 2 வகுப்பு மாணவர் ஜிஜேந்திரகுமார் மற்றும் பெண்கள் பிரிவில் புனிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். சென்ற ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக பெபின் மனோ மற்றும் கிரண் ஜெனிஷா ஆகியோர் வெற்றி பெற்றனர். விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோவை மாவட்ட கோ கோ விளையாட்டு செயலாளர் சிவகுமார் பரிசுகள் வழங்கினார்.விழாவில், உடற்பயிற்சி ஆசிரியர்கள் கண்ணன், சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை