உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை கிரிக்கெட் இன்ஜினியரிங் மாணவர்கள் அபார ஆட்டம்

எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை கிரிக்கெட் இன்ஜினியரிங் மாணவர்கள் அபார ஆட்டம்

கோவை:சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் மூன்றாம் ஆண்டு, 'டாக்டர் எஸ்.ஆர்.கே பிரசாத் நினைவு அலுமினி கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.மாணவ மாணவியருக்கு பூப்பந்து, கபடி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், தடகளம், டேபிள் டென்னிஸ், செஸ், கோ கோ, ஹேண்ட்பால், டென்னிஸ், ஹாக்கி, த்ரோபால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.அதன் ஒரு பகுதியாக, நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில், கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணிகள் மோதின.டாஸ் வென்ற எஸ்.என்.எஸ்., அணி, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு, 101 ரன்கள் சேர்த்தது. கே.பி.ஆர்., அணியின் தன்வந்த் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய கே.பி.ஆர்., அணியின் துவக்க வீரர் ஆதித்யா படேல் சிறப்பாக விளையாட, கே.பி.ஆர்., 14.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 103 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது.மற்றொரு போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, தீனதயாளராஜா (57), கவுசிகன் (33) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 153 ரன்கள் எடுத்தது. பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியின் விஷ்ணு வர்தன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் களமிறங்கிய பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி அணி மாணவர்கள், வரிசையாக தங்களின் விக்கெட்களை இழக்க, அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 89ரன்கள் மட்டுமே எடுத்து, 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வயடைந்தது. பண்ணாரி அம்மன் கல்லுாரிக்குயஷ்வந்த் (31*) ஆறுதல் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை