உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில செஸ் போட்டி ;சேலம் அணி வெற்றி 

மாநில செஸ் போட்டி ;சேலம் அணி வெற்றி 

பொள்ளாச்சி;மாநில அளவில் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான, பெண்களுக்கான கேரம், செஸ் மற்றும் கோகோ போட்டிகள் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று துவங்கியது. தமிழகம், புதுச்சேரி உள்ளடங்கிய பாலிடெக்னிக் கல்லுாரிகள், 11 மண்டலங்களில் வெற்றி பெற்ற மாணவியர் பங்கேற்றனர்.போட்டிகளை கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குர் தேவராஜன், இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். செஸ் போட்டியில், மாணவியர் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.அதில், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடமும், வேலுார் பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணி இரண்டாமிடமும் பெற்றனர். கோவை ராமகிருஷ்ணா கல்லுாரி மூன்றாமிடமும், திருச்சி சேஷசாயா பாலிடெக்னிக் கல்லுாரி அணி நான்காமிடமும் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் மற்றும் சர்வதேச சதுரங்க நடுவர் வினோத்குமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி