உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்டவாள புதுப்பிப்பு பணி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

தண்டவாள புதுப்பிப்பு பணி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை;தண்டவாள புதுப்பிப்பு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இருகூர் - சூலுார் இடையே தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, வரும், 15, 17ம் தேதிகளில், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஆலப்புழா - தன்பாத்(13352) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், கோவை சந்திப்பு வழியாக செல்லாமல், போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும். அதேபோல், எர்ணாகுளம் - பெங்களூரு(12678) எக்ஸ்பிரஸ் ரயில், கோவை சந்திப்பு வழியாக செல்லாமல், போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும்.இரு ரயில்களும், மூன்று நிமிடங்கள் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை