உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

கோவை;கோவை மாநகர மற்றும் மாவட்ட உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் படி கோவை சாய்பாபா காலனி உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த சந்திரசேகரன் திருநெல்வேலி மாவட்டம் குற்ற ஆவண பதிவேடுகள் பிரிவிற்கு உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் குணசேகரன், திண்டுக்கல் மாவட்டத்திற்கு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ஆகவும், கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் திருச்சி குற்ற ஆவண பதிவேடுகள் பிரிவு உதவி கமிஷனராகவும், திருப்பூர் உதவி கமிஷனர் கார்த்திகேயன், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மனோகரன் கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், திருப்பூர் மாநகர குற்ற ஆவண பதிவேடுகள் பிரிவு உதவி கமிஷனர் ராஜன் கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், கோவைமதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., ஜனனி பிரியா கோவை மாவட்ட சிவில் சப்ளை சி.ஐ.டி.,யாகவும், கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அண்ணாதுரை திருப்பூர் மாவட்ட உதவி கமிஷனராகவும் கோவை மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் டி.எஸ்.பி., வெற்றிசெல்வன் பேரூர் டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை