உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவர்களுக்கான வாலிபால்; முன்பதிவுக்கு நாளை கடைசி

 மாணவர்களுக்கான வாலிபால்; முன்பதிவுக்கு நாளை கடைசி

கோவை: மாவட்ட 'ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்' நலச்சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான வாலிபால் போட்டிகள் வரும், 22ம் தேதி டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் இப்போட்டிகளில், 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்; நுழைவுக் கட்டணம் கிடையாது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும், 18ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு, 96292 29052, 98941 95073, 94430 59837 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என, சங்கத்தின் பொது செயலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ