உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வின்டர் கார்னிவெலில் விற்பனைத்திருவிழா

 வின்டர் கார்னிவெலில் விற்பனைத்திருவிழா

கோவை: மாதம்படி, விஸ்வன்கர் பப்ளிக் பள்ளியில், மாணவர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் வகையில் வின்டர் கார்னிவெல் திருவிழா நடந்தது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் வாடிக்கையாளர்களாக மாறி, மாணவர்களின் விற்பனைப் பொருட்களைப் வாங்கி உற்சாகப்படுத்தினர். திட்டமிடல், விடா முயற்சி, தன்னம்பிக்கை, புதுமை மற்றும் சிக்கல் திறன், நெகிழ்வுத்தன்மை உள்ளிட்ட மேற்கண்ட திறன்களை மாணவர்கள் அனுபவரீதியாக கற்றுக்கொண்டனர். இவ்வணிகத்தில் கிடைத்த பணத்தை மாணவர்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்து மகிழ உள்ளதாக தெரிவித்தனர். பள்ளியின் தாளாளர் சங்கீதா, இயக்குனர் கதிர்வேல், முதல்வர் பிருந்தா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை