| ADDED : மே 05, 2024 04:36 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இன்று 5ம் தேதி நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வில் 7 மையங்களில் 5,165 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.இளங்கலை மருத்துவக் கல்வி படிப்பில் சேர தேசிய தேர்வு முகமையால் 'நீட்' எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தியா முழுதும் இன்று நடக்கிறது.மாவட்டத்தில், கடலுார் சி.கே., பாராமெடிக்கல் கல்லுாரி, திருப்பாதிரிபுலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி, கடலுார் மாலுமியார்பேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் பூந்தோட்டம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அடுத்த வில்வக்குளம் அக்ஷரா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி, பனிக்கன்குப்பம் ஜெயின்ட் பால் பப்ளிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் 5,165 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.கடலுார் மாவட்ட நீட் நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீலதா அனைத்து தேர்வு மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விதிமுறைகளின் படி தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.