உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழுத்தை அறுத்துக் கொண்ட இரு குழந்தைகளின் தாய்

கழுத்தை அறுத்துக் கொண்ட இரு குழந்தைகளின் தாய்

திட்டக்குடி : வீட்டில் தனியாக இருந்த இரு குழந்தைகளின் தாய், கழுத்தை தனக்கு தானே அறுத்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் மனைவி ரஞ்சிதா,26; திருமணமாகி நான்கரை ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா, அருவாமனையால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். பக்கத்து வீட்டினர் கொடுத்த தகவலின் பேரில் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை