| ADDED : ஆக 13, 2024 04:48 AM
விருத்தாசலம்: டாஸ்மாக்கில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம், ஜங்ஷன் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வந்த முதியவர் ஒருவர், ரூ.500 கொடுத்து, ரூ.140 மதிப்புள்ள மதுபானத்தை வாங்கிக் கொண்டு மீதி பணம் ரூ.360 வாங்கிச் சென்றார்.சற்று நேரம் கழித்து வந்த அந்த முதியவர் மீண்டும் ரூ.500யை கொடுத்து மதுபானம் கேட்டார். சந்தேகமடைந்த விற்பனையாளர் முருகன், நோட்டை ஆய்வு செய்ததில் அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. அவரது தகவலின்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, முதியவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சன்னாசி மகன் இருசன், 67, என்பது தெரிந்தது. இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருசனை கைது செய்தனர். அவரிடம் 500 ரூபாய் கள்ளநோட்டு எப்படி வந்தது, யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.