உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்டபங்களை சுகாதாரமாக பராமரிக்க ஆலோசனை

மண்டபங்களை சுகாதாரமாக பராமரிக்க ஆலோசனை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் சுகாதாரத்துறை சார்பில், திருமண மண்டப உரிமையாளர்கள், மேலாளர்கள், உணவுப்பொருள் தயாரிப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் சரவணன் வரவேற்றார். இயன்முறை மருத்துவ அலுவலர் சுஜா, மேற்பார்வையாளர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். முகாமில், திருமண மண்டப சமையல் கூடம் உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும், அரசு மருத்துவ சான்று பெற்ற சமையலர்கள் மற்றும் உதவியாளர்களை பணிக்கு அமர்த்தப்பட வேண்டும், சமையல் கூடம் மற்றும் மண்டபத்தில் போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிகள் இருக்க வேண்டும், பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்த வேண்டும், மண்டபங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.சுகாதார ஆய்வாளர்கள் பிரேம்குமார், சரண்ராஜ், ராஜன், செல்வதுரை உட்பட பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ