உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் வேளாண் கல்லுாரி மாணவிகள் சார்பில் உழவன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திருச்சி தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள், விருத்தாசலத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பிளே ஸ்டோர் ஆப்பில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்வது, இந்த செயலி மூலம் கிடைக்கும் நன்மைகள், பயிர்களுக்கு தேவையான பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை