உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

புவனகிரி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

புவனகிரி : புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.பழமையான இக்கோவில் புரனமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தி வைக்கப்பட்டது. பூஜைகள் நடந்த 7ம் தேதி துவங்கியது. 8ம் தேதி மஹா பூர்ணாஹூதி தீபாராதனையுடன் பல்வேறு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை கடம் புறப்பாடாகி, சரியாக 9:00 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் வெங்கடேச தீட்சிதர் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜோதிநாாகலிங்கம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், பேராசிரியர் ரங்கசாமி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி