உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் பூட்டை உடைத்து திருட்டு

கோவில் பூட்டை உடைத்து திருட்டு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே கோவில் பூட்டை உடைத்து, 75 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தில் பத்ரகாளியம்மன் கோவில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்க தாலி, பீரோவில் இருந்த அம்மனுக்கு அலங்காரம் செய்யும் கவரிங் நகைகள் திருட்டு போயிருந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு 75 ஆயிரம் ஆகும். புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து கோவிலில் திருடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை