உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமிக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமிக்கு வலை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.கும்பகோணத்தில் இருந்து அரசு விரைவு பஸ் (கும்பகோணம் கோட்டம்) நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டு சென்றது. டிரைவர் வெங்கடேசன், 47; ஓட்டிச்சென்றார்.சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பு.ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அறிவழகன், 20; என்பவர், குடிபோதையில் காடுவெட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் ஏறியுள்ளார். சேத்தியாத்தோப்பில் இறங்க வேண்டிய வேல்முருகன் இறங்காமல் இருந்துள்ளர். அவரை வலுகட்டமாக பஸ்சில் இருந்து கண்டக்டர் இறக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அறிவழகன், கருங்கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.டிரைவர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து அறிவழகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை