உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

பண்ருட்டி: பண்ருட்டியில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சங்க தலைவர் சிவா தலைமை தாங்கினார். செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சீனுவாசன், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், காய்கறி வியாபாரிகளுக்கு கட்டடம் கட்டிய பின் கடை வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வாடகை பெறாமல் காலம் தாழ்த்தி வரும் நகராட்சி நிர்வாகம் வாடகை பெற்றுக்கொள்ள வேண்டும்.கடலுார் சாலையில் சுகாதார துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்க வேண்டும். அங்கு தற்காலிக கொட்டகை அமைத்து மின்வசதி, குடிநீர், கழிவறை வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை