உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு ஒதுக்கிய நிதியில் ஊழல்? விசாரணை நடத்த கோரிக்கை

விவசாயிகளுக்கு ஒதுக்கிய நிதியில் ஊழல்? விசாரணை நடத்த கோரிக்கை

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக உள்ளது மங்களூர் ஒன்றியம். விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதியில் வேளாண் தொழில் சார்ந்த அரசு திட்டங்கள் எதையும் அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயிகளுக்காக அரசு வழங்கும் வேளாண் இடுபொருட்கள், விதைகள் போன்றவற்றை விவசாயிகளுக்கு விற்காமல் வீணாக்குகின்றனர்.2020--21ம் ஆண்டில் படைப்புழு பாதிப்பை சரிசெய்ய விவசாயிகளுக்கு வேப்பெண்ணை, இன கவர்ச்சிப்பொறி, ஊடுபயிராக பயிர் செய்ய தட்டைப்பயிர் மற்றும் பூச்சி மருந்து வாங்கி விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்க சுமார் 40லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் ஒருசில விவசாயிகளுக்கு மட்டும் பின்னேற்பு மானியம் வழங்கிவிட்டு பாதியளவு நிதி செலவிடப்படவில்லை எனவும், 2021--22ம் ஆண்டில் சுமார் 40லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முழு நிதியும் செலவிடப்படாமல் வேளாண் அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இவ்விவகாரம் குறித்து கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்தும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது, அரசு நிதி ஒதுக்கப்பட்டு அது செலவழிக்கப்பட்டுள்ளது. அதற்கான முறையான கணக்குகள் இல்லை. விசாரணை கமிஷன் வைத்து முறையாக விசாரித்தால் மட்டுமே முழுமையான விபரங்கள் தெரியவரும் என்றார்.விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ஊழல் நடந்துள்ளது உறுதி. மாவட்ட நிர்வாகம் முறையான விசாரணை நடத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை