உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

புவனகிரி: புவனகிரி தம்பிக்கு நல்லாம்பட்டினம் டி.என்.பி., ராக்கர்ஸ் அணி சார்பில் முதல் முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.போட்டியில், மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடியது.வெற்றி பெற்ற அணிக்கு, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், புவனகிரி டாக்டர் கதிரவன், ஊராட்சி தலைவர் நாகராஜன், தம்பிக்குநல்லான் பட்டினம் ரவிக்குமார் இளங்கோவன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பரிசு வழங்கினர்.இளைஞர் விளையாட்டு நிதியாக அவிநாசி சிவசங்கர் ரூ.10 ஆயிரம், பா.ம.க., நகர செயலாளர் கோபிநாத் ரூ.5 ஆயிரம், வழங்கினர்.சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை